0 0
Read Time:5 Minute, 27 Second

கொண்டைக்கடலை என்னும் சுண்டலில் புரோட்டீன் மற்றும் பிற அத்தியாவசிய சத்துக்கள் அதிகம் உள்ளன. இதனை அடிக்கடி உணவில் சேர்த்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். சுண்டலை பலவாறு சாப்பிடலாம். அதில் ஊற வைத்து பச்சையாக சாப்பிடுவது, குழம்பாக தயாரித்து சாப்பிடுவது, முளைக்கட்ட வைத்து சாப்பிடுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை. இதுவரை நாம் சுண்டலை சாப்பிடுவதால் பெறும் நன்மைகளைக் குறித்து தான் பார்த்திருப்போம். ஆனால் சுண்டல் ஊற வைத்த நீரிலும் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன என்பது தெரியுமா?

ஆம், சுண்டல் ஊற வைக்கும் நீரை ஒருவர் குடிக்கலாம். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சுண்டல் ஊற வைத்த நீரை வழக்கமாக குடித்து வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலிமையாக இருக்கும். சுண்டலில் கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன், நார்ச்சத்து, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்களான ஏ, பி, சி, டி போன்றவை அதிகம் உள்ளன. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த சுண்டலை நீரில் ஊற வைத்து, அந்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், உடல் பல நோய்களில் இருந்து விலகி இருக்கும்.

சுண்டல் நீர் தயாரித்து குடிக்கும் முறை:

  • இரவு தூங்கும் முன் சுண்டலை நன்கு கழுவி, சுத்தமான நீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
  • மறுநாள் காலையில் அந்த நீரை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
  • விருப்பமுள்ளவர்கள், சுண்டல் நீரில் தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.
    இப்போது சுண்டல் ஊற வைத்த நீரைக் குடிப்பதால் பெறும் நன்மைகளைக் காண்போம்.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

ஊற வைத்த சுண்டல் நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், அனைத்து வகையான நோய்களில் இருந்தும் உடல் பாதுகாப்பாக இருக்கும் மற்றும் அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படும் அபாயமும் குறையும். ஏனெனில் இந்த சுண்டல் நீர் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்:

சுண்ட ஊற வைத்த நீரை தினமும் குடிக்கும் போது, இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். எனவே சர்க்கரை நோயாளிகள் சுண்டல் ஊற வைத்த நீரைக் குடிப்பது மிகவும் நல்லது. குறிப்பாக உயர் இரத்த சர்க்கரை உள்ளவர்கள் குடிப்பது நன்மை பயக்கும்.

எடை இழப்பிற்கு உதவும்:

நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவராயின், சுண்டல் ஊற வைத்த நீரைக் குடியுங்கள். இப்படி குடித்தால், உடல் சோர்வு மற்றும் உடல் பலவீனமாக இருக்கும் உணர்வு தடுக்கப்படுவதோடு, வயிறு நீண்ட நேரம் நிரம்பி அடிக்கடி பசி ஏற்படும் உணர்வையும் குறைக்கும்.

வயிறு சுத்தம்:

சுண்டல் ஊற வைத்த நீர் மலச்சிக்கல் பிரச்சனைகளை நீக்க உதவுகிறது மற்றும் வயிற்றை சுத்தம் செய்ய உதவி புரிகிறது. அதோடு, இது வாய்வுத் தொல்லை மற்றும் அஜீரண கோளாறு போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

சருமத்திற்கு நல்லது:

சுண்டல் ஊற வைத்த நீர் சருமத்தின் உட்புறத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும் இது பல சருமம் தொடர்பான பிரச்சனைகளைத் தடுத்து, இயற்கை அழகை மேம்படுத்துகிறது. எனவே நீங்கள் அழகாகவும், இளமையாகவும் காட்சியளிக்க நினைத்தால், சுண்டல் நீரைக் குடியுங்கள்.

சுண்டல் ஊற வைத்த நீரை குடிக்க சிறந்த நேரம் எது? சுண்டல் ஊற வைத்த நீரைக் குடிக்க சிறந்த நேரம் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பது தான் என்று உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் உடல் எடை குறையும் மற்றும் பலவீனமாக இருக்கும் நோயெதிர்ப்பு சக்தியும் வலிமையாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %