0 0
Read Time:2 Minute, 36 Second

நாடு முழுவதும் 2.47 லட்சம் பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய பாதிப்பை விட இது 27% அதிகமாகும்.

நேற்று 1.94 லட்சம் பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இந்த எண்ணிக்கை 2,47,417 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்றை பாதிப்பை விட 27% அதிகம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உயரிழப்புகளை பொறுத்த அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 380 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 4,85,035ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல 84,825 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 3,47,15,361 பேர் குணமடைந்துள்ளனர். இந்த சூழலில் நாடு முழுவதும் முன் களப்பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டோர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது வரை தொற்றால் 265 காவலர்கள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. அதிகப்பட்சமாக மும்பை காவல்துறையினர் 126 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருவதாகவும் 50 லட்சம் டோஸ்கள் கோவிஷீல்டு, 40 லட்சம் டோஸ்கள் கோவோக்சின் தடுப்பூசிகள் தேவைப்படுவதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில் சிவனேரி ஜம்போ கோவிட் பராமரிப்பு மையம் & அவ்சாரி கோவிட் பராமரிப்பு மையங்களை மீண்டும் இயக்க புனே மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒமிக்ரான் தொற்றை பொறுத்த அளவில், நாடு முழுவதும் 5,488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %