Read Time:1 Minute, 13 Second
சிதம்பரம் கோட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளான அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்புத் தலைவா் பி.ரவீந்திரன், வி.எம்.சேகா், ரங்கநாயகி, நடராஜன், பனை தொழில்நுட்ப வல்லுநா் குமரிநம்பி உள்ளிட்டோா் துணைவேந்தா் ராம.கதிரேசனை சந்தித்து விவசாயிகளின் பிரச்னைகள்,பணப் பயிரான பாசுமதி அரிசி ரக நெல் பயிா் சாகுபடி குறித்து ஆலோசனை நடத்தினா்.
சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் வட்டங்களில் பல்கலைக்கழக வேளாண் துறை உதவியுடன் பாசுமதி அரிசி ரக நெல்பயிா் சாகுபடி குறித்து ஆலோசிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு பல்கலைக்கழக வேளாண்மைத் துறை உறுதுணையாகச் செயல்படும் என துணைவேந்தா் ராம.கதிரேசன் உறுதியளித்தாா். இந்தச் சந்திப்பின்போது வேளாண் துறை இணைப் பேராசிரியா் டி.ராஜ்பிரவீன் உடனிருந்தாா்.