0 0
Read Time:3 Minute, 36 Second

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151ஆவது தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா!.151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் நடைபெறுகிறது!

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151ஆவது தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா, ஏழு திரை நீக்கி காண்பிக்கப்படுகிறது. இந்தத் ஜோதி தரிசனம், 151 ஆண்டுகளில் முதல் முறையாக பக்தர்களே இல்லாமல் நடைபெறுகிறது.

கடலூர்: ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என பாடிய ராமலிங்க அடிகளார் என்னும் வள்ளலார், கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர்.

இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், வடலூரில் சமரசசுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை நிறுவினார் வள்ளலார். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளன்று, சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம்.

இந்நிலையில் 151வது தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞானசபை அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் நேற்று (ஜன.17) கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்து இருந்த நிலையில் கொடியேற்றத்தின் பொழுது பக்தர்கள் குறைந்த அளவில் கலந்து கொண்டனர்.

பின்னர் சத்திய ஞானசபையில் இன்று முதல் காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் ஞானசபையில் நிலைக் கண்ணாடிக்கு முன்பு கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன் நிறம், வெள்ளை, கலப்பு வண்ணத் திரை என்று 7 வண்ணத் திரைகள் உள்ளன. அந்த திரைகள் ஒவ்வொன்றாக விலக்கி நிலைக் கண்ணாடிக்குள் இருக்கும் ஜோதியை காண்பதே ஜோதி தரிசனமாகும்.

அதன்படி காலை 6 மணிக்கு நிலைக் கண்ணாடி முன் காணப்பட்ட 7 திரைகளும் ஒவ்வொன்றாக விலக்கப்பட்டது. அப்போது நிலைக் கண்ணாடிக்குப் பின் வள்ளலார் கரத்தால் ஏற்றி வைத்த தீபம் பிரகாசமாக காட்சி அளித்தது. எப்பொழுதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து ஜோதி தரிசனத்தைக் காண்பது வழக்கம்.

ஆனால், கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக மிகவும் குறைந்த அளவு பக்தர்களே கலந்துகொண்டனர். மேலும், அன்னதானம் வழங்கவும் கடைகள் மற்றும் ராட்டினம் அமைக்கவும் என எதற்கும் அனுமதி இல்லை. காலை 6 மணி ஜோதி தரிசனத்தைத் தொடர்ந்து காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி மற்றும் நாளை காலை 5.30 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %