0 0
Read Time:1 Minute, 22 Second

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர்கள், மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ரூ. 25 ஆயிரத்தை இந்தக் கல்லூரியிலும் வழங்க வலியுறுத்தித் தொடர்ந்து 5 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், மருத்துவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாகப் பல்கலைக்கழக நிர்வாகம் திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு மருத்துவர்கள் தங்கியிருக்கும் விடுதியில் 11 மணிக்குள் விடுதியைக் காலிசெய்ய வேண்டும் என்ற அறிவிப்பை ஒட்டியுள்ளனர்.

தொடர்ந்து பயிற்சி மருத்துவரிடம் பேச்சுவார்த்தை பல்கலைக்கழகம் மூலமாக நடைபெற்றது உடன்பாடு ஏற்படாத நிலையில் மாணவர்கள் விடுதிக்கு சென்று சட்டி ஏந்தி உணவு கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

நிருபர்:பாலாஜி, சிதம்பரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %