1 0
Read Time:2 Minute, 58 Second

கொரோனா தொற்று தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணி, உரிய மருத்துவ நிபுணத்துவத்தை கொண்டு இரண்டு தவனைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நோய் தொற்றுக்கு எதிராக கூடுதல் எதிர்ப்புசக்த்தியை உண்டுசெய்ய, ஜனவரி 3-ஆம் தேதி முதல் 15-18 வயதுடைய சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்துப்பட்டு வருகிறது.

மேலும், ஜனவரி 10-ஆம் தேதி முதல் மூர்த்த குடிகளுக்கும், முன் களப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இனி வரும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இந்த சிறப்பு தடுப்பூசி முகாம் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 600-க்கு மேற்பட்ட இடங்களிலும், சென்னையில் 160 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கபட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தற்போது வரை 4 லட்சம் பேர், தகுதியானவர்களாக இருக்கும் நிலையில் நேற்று முன் தினம் வரை, 95 ஆயிரம் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில் பயனார்களின் எண்ணிக்கை அதிகரிக்க, இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதுபோல் சென்னையில் மட்டும் 160 இடங்களில் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டாவது டோஸ் செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்தவர்கள், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது முகாமில் மருத்துவரால் வழங்கப்பட்ட தடுப்பூசி அட்டை மற்றும் ஆதார் போன்ற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை உடன் கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %