பரங்கிப்பேட்டையில் பிரதான சாலையான பேருந்து நிறுத்தம்-அரசு மருத்துவமனை சாலையில் போக்கு வரத்துக்கு இடையூராக நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை போலீசார் அப்புறபடுத்தி வண்டியில் ஏற்றினார்கள்.
மருத்துவமனை, வாத்தியாப்பள்ளி, அன்னங்கோயில் போன்ற இடங்களுக்கு வரும் பேருந்துகள் உள்ளே வரவில்லை என்ற பொதுமக்களின் புகாருக்கு கடைகளின் ஆக்கிரமிப்புகள் மற்றும் வாகங்களின் இடையூறுகளால் உள்ளே வருவது சிரமமாக உள்ளது என்று பேருந்து ஓட்டுநர்-நடத்துனர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பரங்கிப்பேட்டை பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பலரும் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் வாகன ஓட்டிகளிடம் நடவடிக்கை எடுப்பதை போல, தெருவை ஆக்கிரமித்துள்ள கடைகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளால் தான் வாகனங்களை நிறுத்த முடியாமல் வழியில் நிறுத்தும் படி ஆகிறது. பஸ் ஸ்டாண்டிலிருந்து சின்னக்கடை வரை மற்றும் பெரியக்கடை-மெயின் ரோடு ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை அகலப்படுத்தாதவரை இது தொடரவே செய்யும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நிருபர்:பாலாஜி, சிதம்பரம்