Read Time:1 Minute, 19 Second
சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்திவரும் குப்பை மேடுகள் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குவேண்டும் என
பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் இருக்கும் இடங்களில் குப்பைகள் கழிவுப்பொருட்கள் பல நாட்களாக தேங்கி கிடப்பதாலும் மாநகராட்சி துப்புரவு பணி மேற்கொள்ளும் அதிகாரிகள் தேங்கிக் கிடக்கும் குப்பைகழிவுகள் அகற்றப்படாததால் துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருவதாகவும் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருவதாகவும் பேருந்து ஏற வரும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
நிருபர்:முரளிதரன்.
[…] கடலூர்: துர்நாற்றம் வீசும் கடலூர்… […]