0 0
Read Time:1 Minute, 40 Second

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் திருவெண்காடு ஊராட்சியில் அமைந்துள்ள சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் நவகிரகங்களில் ஒன்றான புதன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.

இக்கோயிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர் இத்தகைய புகழ்பெற்ற கோயிலுக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் நலன் கருதி 3 கோடியே 29 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை மின்விளக்கு வடிகால் வசதி ஆகிய பணிகள் நடந்து வருகின்றது.

இந்த பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குனர் முருகண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் சீர்காழி ஒன்றியக்குழு தலைவர்
கமலஜோதி தேவேந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், அருள்மொழி, ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் , பொறியாளர்கள் கலையரசன், சிவகுமார், தெய்வானை, ஒவர்சியர்கள் சந்திரசேகர், ஓசைநாயகி ,பிருந்தா ஊராட்சி செயலாளர் கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.

நிருபர்:முரளிதரன்,சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %