0 0
Read Time:1 Minute, 38 Second

தீவிர கொரோனா நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படும் நேரத்தில், பயன்படும் சிறிய காற்று செறிவூட்டி இயந்திரங்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கும், அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் ரோட்டரி சங்கங்கள் சார்பாக வழங்கப்பட்டது.

ரூ.70,000/= மதிப்பிலான:

CPAP – BiPAP எனப்படும் Simple ventilator களை சென்ற ஆண்டின் உதவி ஆளுநர் பி. முஹம்மது யாசின், மண்டல செயலாளர் இ. மஹபூப் உசேன் வழங்க, சிதம்பரம் அரசு காமராசர் மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி மரு. ரவி மற்றும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி கண்காணிப்பாளர் மரு. லாவண்யா குமாரி, துணை மருத்துவ கண்காணிப்பாளர் மரு. ஜெயஸ்ரீ பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு அண்ணாமலை பல்கலைக்கழக கடல் உயிரியல் புல முதல்வர் பேரா. அனந்தராமன், உதவி ஆளுநர் தேர்வு தீபக்குமார் முன்னிலை வகித்தனர்.

இதில் 2020-21ம் ஆண்டின் ரோட்டரி சங்க தலைவர்கள் சோனா. பாபு, பேரா.சீனிவாசன் மற்றும் மிட்-டவுன் சங்க தலைவர் கலைச்செல்வன், சென்ட்ரல் சங்க தலைவர் சீனுவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிருபர்:பாலாஜி, சிதம்பரம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %