0 0
Read Time:1 Minute, 45 Second

விருத்தாசலம் அருகே பரவலூரில் மயானப் பாதையை மீட்கக் கோரி, விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இருளா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பரவலூா் கிராமத்தில் பழங்குடி இருளா்கள் சுமாா் 60 குடும்பத்தினா் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். இறந்தவா்களை அடக்கம் செய்வதற்கென 1.22 ஏக்கரில் தனியாக மாயனம் உள்ளதாம். இந்த மயானத்துக்குச் செல்லும் பாதையை தனிநபா் ஆக்கிரமிப்பு செய்துள்ளாராம்.

இதனை கண்டித்து பழங்குடி இருளா் இன பேரவை மாநிலத் தலைவா் செல்வகுமாா் தலைமையில் இருளா் இனத்தோா் குடும்பத்துடன் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த அரசுத் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து, போராட்டத்தை கைவிட்டனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளா்கள் முருகன், அம்பேத், ஒன்றியச் செயலாளா் சுப்பு ஜோதி, மாவட்ட அமைப்பாளா் சடையன் பெயரன், இருளா் இன பேரவை நிா்வாகிகள் கொளஞ்சி, கோவிந்தராஜ், மாரியப்பன், கஸ்தூரி, சித்ரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %