0 0
Read Time:2 Minute, 36 Second

மணல்மேடு அருகே முதலை இருந்த குளத்தில் தவறி விழுந்த முதியவரை பிணமாக பொதுமக்கள் மீட்டனர்.

கோவில் குளத்தில் முதலை

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே சாத்தங்குடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் குளத்தில் மீன்கள் வளர்க்கப்பட்டு ஏலம் விடப்படுவது வழக்கம். இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து பிரியும் ராஜன் வாய்க்கால் வழியாக முதலைகள் இந்த குளத்திற்கு வந்து மீன்களை உண்பதாக பொதுமக்கள் வனத்துறைக்கு புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து வனத்துறையினர் கடந்த 6 நாட்களாக குளத்தில் தூண்டில் அமைத்து முதலையை தேடி வந்தனர்.

தவறி விழுந்தார்:

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை இதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம்(வயது 70) என்பவர் குளத்தில் இறங்கியபோது தவறி குளத்திற்குள் விழுந்து விட்டார்.

இதையடுத்து அவரை பொதுமக்கள் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. குளத்தில் விழுந்த ராமலிங்கத்தை முதலை இழுத்து சென்றிருக்கலாம் என அந்த பகுதி மக்கள் அச்சத்தில் இருந்தனர்.

பிணமாக மீட்பு:

இதையடுத்து வனத்துறையினர் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை கொண்டு முதலையை தூண்டில் முள் அமைத்து மிதவை படகு மூலம் தேடினர். பொது மக்களும் நீண்ட குச்சிகளின் உதவியோடு உடலை தேடினர். நீண்ட முயற்சி பிறகு ராமலிங்கத்தை பிணமாக பொதுமக்கள் மீட்டனர்.

அவரது உடலில் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதனால் அவரை முதலை தாக்கவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு முதலையை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
100 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %