0 0
Read Time:2 Minute, 35 Second

சென்னை: தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் நாளைமுதல் நேரடியாகத் திறந்து செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளில்,

1 முதல் 12ஆம் வகுப்பு வரையும், கல்லூரிகளும் நாளை முதல் நேரடியாகத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குழுவாக அமர்ந்து உணவு உண்ண அனுமதிக்கக் கூடாது.
கல்லூரிகள், பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவரும் கரோனா பாதுகாப்பு நடவடிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அனைவரும் வாய், மூக்கை மூடும் வகையில் முகக்கவசத்தை அனைத்து நேரங்களிலும் அணிந்திருக்க வேண்டும்.

கை கழுவுதல் அல்லது சானிடைசர் பயன்படுத்தி கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.

தினமும் பள்ளி வளாகத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள், 15 முதல் 18 வயதுடைய மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து ஆசிரியர்கள், மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகைதரக் கூடாது.

காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி வளாகங்களில் எச்சில் துப்புவதைத் தடுக்க வேண்டும்.
மாணவர்கள் வருவதற்கும், வெளியில் செல்வதற்கும் தனித்தனியாக வழிகளை உருவாக்கலாம்.

பள்ளிகளில் ஆன்லைன் அல்லது நேரடி வகுப்புகள் நடத்துவதை அந்தப் பள்ளியின் நிர்வாகம், பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து முடிவு செய்துகொள்ளலாம்.

இந்த வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதைச் சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %