பேரறிஞர் அண்ணாவின் 53 -ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் மேலமுக்கூட்டு கடைவீதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் மற்றும் மயிலாடுதுறை பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன் நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், மாநில விவசாய அணி இணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பால.அருள்செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.சித்திக், செம்பை ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் மற்றும் திமுக தொண்டர்கள் கலந்துகொண்டு மாலை அணிவித்து புகழ் அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.