0 0
Read Time:2 Minute, 23 Second

புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 29). சம்பவத்தன்று இவர் காணாமல் போனார். இவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது பற்றி கடந்த 16.12.21 அன்று புவனகிரி போலீசில் கொடுத்த புகாரின் பேரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சுந்தரமூர்த்தியை தேடி வந்தனர்.

இந்நிலையில் 19.12.21 அன்று புவனகிரி ஓ.என்.ஜி.சி. டாஸ்மாக் கடை பின்புறம் காணாமல் போன சுந்தரமூர்த்தி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரை அதே ஊர் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த ராஜா மகன் அய்யப்பன் (29) கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

குண்டர் சட்டத்தில் கைது

இதையடுத்து அவரை பிடித்து புவனகிரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மனைவியிடம் கள்ளக்காதல் வைத்திருந்ததால் சுந்தரமூர்த்தியை கொலை செய்ததாக அய்யப்பன் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து. கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து அய்யப்பனின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில், அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதையடுத்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் உத்தரவின்பேரில் அய்யப்பனை புவனகிரி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். அதற்கான உத்தரவு நகலை சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %