0 0
Read Time:3 Minute, 26 Second

பரங்கிப்பேட்டைக்கு வராமல் செல்லும் பஸ்கள்

பரங்கிப்பேட்டை நகரில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பல்வேறு தேவைகளுக்காக அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலம் சிதம்பரம், கடலூர் போன்ற நகர்புறங்களுக்கு தினந்தோறும் சென்று வருகிறார்கள். இதுதவிர பள்ளி, கல்லூரி மாணவர்களும் சிதம்பரம், கடலூர் போன்ற பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு சென்று படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடலூரில் இருந்து பரங்கிப்பேட்டை வழியாக சிதம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்துக்கு வராமல் கொத்தட்டை வழியாக சென்று வருகிறது.

தனியார் பஸ் சிறைபிடிப்பு

இதனால் பரங்கிப்பேட்டை பகுதி மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு நகர்ப்புறங்களுக்கு சென்றுவர முடியாமல் பரிதவித்து வந்தனர். மேலும் இதுபற்றி சமூகஆர்வலர்கள் சிலர், பரங்கிப்பேட்டை வழியாக கடலூர்-சிதம்பரம் வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து பஸ்களும் கட்டாயம் பரங்கிப்பேட்டைக்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பரங்கிப்பேட்டை நகர பொதுமக்கள் நேற்று காலை பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்துக்கு வந்த தனியார் பஸ்சை திடீரென சிறை பிடித்தனர். பின்னர் அவர்கள் கடலூர், சிதம்பரத்தில் இருந்து பரங்கிப்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து பஸ்களும், பரங்கிப்பேட்டை பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டும் என கண்டன கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைத்து பஸ்களும் பரங்கிப்பேட்டைக்கு வந்து செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் பஸ்சை விடுவித்து சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %