தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க வரும் பட்ஜெட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படும் என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில்: 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைப்பெற உள்ளது. இந்நிலையில் இதற்கான வேட்புபனுக்கள் பரிசீலனை நேற்று நிறைவடைந்த நிலையில் இறுதி வேட்பாலர் பட்டியல் வெளியிடப்பட்டது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 12,607 பதவியிடங்களுக்கு 57,778 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருகின்றனர். மேலும் 12,324 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. மேலும், தாக்கல் செய்யப்பட்டதில் 2,062 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்ய உரிய இடங்கள், எவையெல்லாம் இந்த நகர்ப்புற உள்ளாட்சியில் பின்பற்றி நடக்கவேண்டும் எனவும் மாநிலத் தேர்தல் ஆனையம் அறிவித்து வருகிறது. இந்நிலையில், கட்சிகளின் சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டங்களும், ஆங்காங்கே பிரச்சாரங்களும் நடைப்பெற்று வருகிறது.
மதுரை ஆரப்பாளையத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், 10 ஆண்டுகளாக ஊழல் ஆட்சி நடைபெற்று வந்தததாக குற்றம்சாட்டினார். தாம் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் 2 முறை தேர்தலில் வெற்றி பெற்றதாக அவர் தெரிவித்தார். மேலும், கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என கூறிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாடுபட்டு வருவதாக குறிப்பிட்டார்.