நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி காணொலி வாயிலாக நடைபெற்றது. அப்போது 11 வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
அதில், “அனைத்து வீடுகளுக்கும் விலையில்லா தரமான குடிநீர் வழங்கப்படும் எனவும் கிராம சபையைப் போல ஏரியா சபை, வார்டு கமிட்டிக் கூட்டங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தின் உதவியோடு உள்ளாட்சி சேவை மையம் வீடு தேடி வரும் என்றும் கால உத்தரவாதத்துடன் கூடிய தரமான சாலைகள் அமைக்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் , ஒவ்வொரு தெருவிலும் ஸ்மார்ட் கழிவுத்தொட்டி அமைக்கப்படும் என்பன உள்ளிட்ட 11 வாக்குறுதிகள் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து பேசிய கமல், “தமக்கு மதம் பிடிக்காது என்றும், மனிதம் தான் பிடிக்கும்” என்றும் தெரிவித்தார்.