0 0
Read Time:2 Minute, 10 Second

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறையில் சிறிய மாற்றம் செய்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது.

புதிய நடைமுறை, இந்த மாதம் 14-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் வரும் பயணிகளில் 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: திமுக மீது அவதூறு பரப்பியதாக யூடியூபர் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து

இம்முறையில், ரேண்டம் அடிப்படையில் பரிசோதனைகள் நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பரிசோதனை மாதிரிகள் கொடுத்த பின்னரே விமான நிலையத்தை விட்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அந்த வழிகாட்டு நெறிமுறையில் சொல்லப்பட்டுள்ளது. ஒருவேளை அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அந்த மாதிரிகளை மேற்பகுப்பாய்வுக்காக அனுப்பப்ப வேண்டும். எனவும், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் உடல்நிலை 14 நாட்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஐந்து வயதுக்கு உள்ளே குழந்தைகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பும் இறங்கிய பின்பும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என புதிய வழிகாட்டு நெறிமுறையில் கூறப்படுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %