0 0
Read Time:2 Minute, 24 Second

புதுச்சேரி அரியாங்குப்பம் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவரை ஹிஜாப் அணிவதற்கு ஆசிரியர் எதிர்ப்பு தெரிவித்ததாக எழுந்த புகாரை அடுத்து குழு அமைத்து விசாரணை செய்யப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பரிந்துரை செய்துள்ளார்.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஹிஜாப் அணிந்து மாணவி பள்ளிக்கு வந்ததாகவும் ஹிஜாபுடன் வகுப்பறையில் அமர்ந்ததால் அதற்குத் தடை விதித்ததாகப் புகார் எழுந்தது. புகாரையடுத்து பல்வேறு மாணவர் அமைப்பு மற்றும் சங்கங்கள் ஒன்றிணைந்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். அவர்கள் இது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை அவர்கள் பெற்றோரிடம் புகார் அளித்ததாகவும் அது தற்போது வெளியே கசிந்து இதுமாதிரி புகாராக வந்துள்ளதாகத் தெரிவித்து அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.
இதனிடையே நேற்று மாணவர் கூட்டமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மேலும் இதுபோன்று புகார் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் கல்வித்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை சார்பில் குழு ஒன்று அமைத்து முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கல்வித்துறைக்குப் பரிந்துரை செய்துள்ளார். மேலும் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %