கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சக்தி கணேஷ் அறிவுறுத்தலின் பெயரில் நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி வடலூர் கெங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் நெய்வேலி சரகத்திற்கு உட்பட்ட காவல்துறையினர் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி அணிவகுப்பு நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் 100 விழுக்காடு வாக்களிக்க முழு பாதுகாப்பு அளிப்போம் என்றும் பொதுமக்கள் தேர்தலில் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்க வேண்டும் தேர்தல் மற்றும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாக்களிக்க வேண்டும் என்று ஒலிபெருக்கி மூலம் பேசி குறிஞ்சிப்பாடி விழுப்புரத்தில் தொடங்கி பெருமாள் கோயில் காந்திசிலை எல்லைகள் கடைவீதிகள் வழியாக சென்று பேருந்து நிலையம் வீதிகளின் வழியாக நடந்து சென்று விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
நிருபர்:முரளிதரன்,சீர்காழி.