கடலூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் இருக்கும் பயணிகள் காத்திருப்பு அறை, துப்புறவு பணித்துறை அலுவலர்கள் சரியாக பராமரிக்கப்படாததால் மது அருந்தும் பிரியர்களுக்கு மது அருந்த பயணிகள் காத்திருப்பு அறை மிகவும் மோசமாக உள்ளதாலும் அறையில் மண்டிக் கிடக்கிறது.
மேலும் குப்பைகளாலும் துர்நாற்றம் வீசுவதாலும் மதுபாட்டில்கள் கிடப்பதாலும் சரியான -முறையில் அமரும் இருக்கைகள் உடைந்து காணப்படுவதால் பயணிகள் அங்கு காத்திருந்து, பேருந்து ஏற முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் மின் விளக்குகள் எரியாமல் இருப்பதாகவும் பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். கடலூர்மாநகராட்சி பேருந்து,நிலையத்தில் பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்கான நூற்றுக்கணக்கான பேருந்துகள் மணி நேரமும் வந்து செல்கின்றன. பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுனர்களுக்கு நேரம் பிரச்சனைகள் வராமலிருக்க நேரம் காட்டும் மணி கூண்டு அமைக்கப்பட்டுள்ளது ஆனால்.
பல நாட்களாக இயங்காமல் மணிகண்டு இருந்து வருகிறது. இதனால் பேருந்து ஓட்டுனர்களுக்கு அடிக்கடி நேர பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதாகவும் புகார் தெரிவிக்கின்றனர். ஆகையால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நேரம் காட்டாத மணிக்கூண்டையும் பயணிகள் காத்திருக்கும் அறைகளையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
நிருபர்:முரளிதரன்,சீர்காழி.