0 0
Read Time:1 Minute, 49 Second

நகர்புற தேர்தலையொட்டி வாக்குரிமையுள்ள தொழிலாளர்களுக்கு விடுப்புக் கொடுக்க வேண்டும்
என்று தமிழ அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவிகளுக்கு, வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது.
தேர்தலையொட்டி வேட்பாளர்களும், கட்சித் தலைவர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
‘நகர்ப்புற தேர்தல் வாக்குப்பதிவு அன்று வாக்குரிமை உள்ள தொழிலாளர்களுக்கு விடுப்பு தர வேண்டுமென்றும், வாக்குப்பதிவு அன்று விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களுக்கு சம்பள பிடித்தம் சம்பளக் குறைப்பு இருக்கக்கூடாது என்றும், உத்தரவை மீறும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %