கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு சந்திக்கும் முதல் தேர்தல், இந்த தேர்தல் ஆகும். இதனால் மாநகராட்சியில் மேயர் பதவியை பிடிக்க திமுக- அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளன. இதில் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு 10 இடங்களை ஒதுக்கியுள்ளது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு தலா 3 இடங்களையும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக ளுக்கு தலா 2 இடங்களையும் ஒதுக்கீடு செய்தது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளர்கள் திமுக சின்னத்திலேயே போட்டியிடுகின்றனர்.
திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் தங்களது சின்னங்களில் போட்டியிடுகின்றனர். இதனால் கடலூர் மாநகராட்சியில் 38 வார்டுகளில் திமுக சின்னங் களில் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
அதிமுக 45 வார்டு களிலும் போட்டியிடுகிறது. கடலூர்மாநகராட்சி தேர்தலில் அதிமுக, திமுகவுடன் 38 வார்டுகளில் நேரடி யாக மோதுகிறது.
பாமக 32 வார்டுகளிலும், பாஜக 28 வார்டுகளிலும், நாம் தமிழர் கட்சி 26 வார்டுகளிலும், அமமுக 20 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. மக்கள் நீதி மய்யம் 11 வார்டுகளில் வேட்பாளர்களை களம் இறக்கி யுள்ளது.
சுயேச்சைகள் 72 பேர் போட்டி யிடுகின்றனர். வாக்குப் பதிவு நாள் நெருங்கும் நிலையில் கடலூர் மாநகராட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்தந்த கட்சியினர், சுயேச்சைகள் சுழன்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.