1 0
Read Time:3 Minute, 44 Second

அயலக திமுக புருணை தளபதி பேரவை சார்பில் உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சிறப்பு பிரச்சார காணொலி பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திமுக புருணை தளபதி பேரவை செயலாளர் ஹா.இதிரிஸ் தலைமையில் “உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய வாக்களிப்பீர்கள் திராவிட முன்னேற்றக் கழகம் முற்போக்குக் கூட்டணிக்கு” என்ற தலைப்பில் உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் சிறப்பு பிரச்சார காணொலி பொதுக்கூட்டம் துவங்கியது.

திராவிட கழக பேச்சாளர் வி.புஷ்பலதா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தளபதி பேரவை கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் மேட்டுப்பட்டி ராஜா முகமது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, புருணை தளபதி பேரவை இணை செயலாளர் மதரஸா பாபுஜி வரவேற்றுப் பேசினார். குவைத் தளபதி பேரவை பொறியாளர் அணி செயலாளர் அகமது பிலால் அறிமுக உரை நிகழ்த்தினார். அபுதாபி தளபதி பேரவை தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வேலூர்.மா.மணிவண்ணன் விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

சவுதி அரேபியா தளபதி பேரவை செயலாளர் திருச்சி குண்டு பிலால்,குவைத் தளபதி பேரவை அவைத் தலைவர் டாக்டர் சாந்தமூர்த்தி, குவைத் தளபதி ஒருங்கிணைப்பாளர் பட்டுகோட்டை சரவணன் , அபுதாபி தளபதி பேரவை செயலாளர் ஜி.எஸ் மூவேந்தன்,அபுதாபி தளபதி பேரவை வி.ம.செந்தில்குமார் நிர்வாக ஆலோசனைக் குழு உறுப்பினர்,புருணை தளபதி பேரவை செயலாளர் ஹா.இதிரிஸ், புருணை தளபதி பேரவை துணை ஒருங்கிணைப்பாளர் சீனி முஹம்மது, மலேசியா தளபதி பேரவை பொருளாளர் என்.எம்.வீரபாண்டியன், மலேசியா தளபதி பேரவை இணைச் செயலாளர் சார்லஸ்(எ)ஜோசப் அகஸ்டின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அபுதாபி தளபதி பேரவையின் இளைஞர் அணி இணை அமைப்பாளர் சே.மகேந்திரன், மலேசியா தளபதி பேரவை ஜெயசீலன், அபுதாபி தளபதி பேரவை சதீஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கணிணி தொழில்நுட்பம் குவைத் மாணவரணி செயலாளர் நபில் ராஜா.

இதில் முத்துபாண்டி,முத்துகுமார்,கலைவாணன்,பாலகுரு,பரங்கிப்பேட்டைநசுருதீன், மாலிக் நாசர்,சீராஜ், இளங்கோ,மலேசியா விந்தை குமரன், சுதின்,, கத்தார் கோபாலகிருஷ்ணன், வேலூர் லோகநாதன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக புருணை தளபதி பேரவை பொருளாளர் சேக் சிக்கந்தர் நன்றி தெரிவித்துப் பேசினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் அயலக திமுக தளபதி பேரவை கூட்டமைப்பு சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %