0 0
Read Time:1 Minute, 53 Second

தமிழகத்தில்கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நோய்த் தொற்று குறைந்துள்ள நிலையில், தற்போது பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று முதல் பெரும்பாலான கட்டுப்பாடுகளுக்கு அளிக்கப்பட்ட தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நா்சரி, விளையாட்டுப் பள்ளிகள், மழலையா் காப்பகங்கள், தொடக்கப்பள்ளிகள் ஆகியவற்றில் நடத்தப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதல்நாள் என்பதால் குழந்தைகளுக்கு அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெற்றன. பெரும்பாலான பள்ளிகளில் பெற்றோர்கள் குழந்தைகளை விட்டு விட்டு வீடுகளுக்கு செல்லாமல் வெளியேயே அமர்ந்திருந்தனர். 3 மணி நேரம் எப்படி குழந்தைகள் இருப்பார்கள்? என்ற மன நிலையில் ஒவ்வொரு பெற்றோரும் கவலையுடன் பள்ளி வாசல் முன்பு காத்து நின்றனர்.

மதியம் 12 மணிக்கு வகுப்புகள் முடிந்தவுடன் பெற்றோர்கள் ஓடிச்சென்று தங்கள் குழந்தைகளை கையில் தூக்கி முத்தமிட்டு மகிழ்ந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %