தமிழக அரசு அறிமுகம் செய்த புதிய மருத்துவ காப்பீட்டு காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை கொரோனாவுக்கு சிகிச்சை
புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான கொரோனா சிகிச்சை செலவு 10 லட்சம் ரூபாயை கடந்தால் அதனை தமிழக அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கான சிகிச்சை செலவை மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்க்கும்படி அரசு ஊழியர்கள் சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இதனை ஏற்று, புதிய காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு வௌியிட்டது. மேலும் அத்திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 10 லட்சம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் கொரோனா சிகிச்சைக்கான செலவு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் அதிகரித்தால், அத்தொகையை பணமாக அரசு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென முதற்கட்டமாக ஒரு கோடி ரூபாயை சுழல் நிதியாக தமிழக அரசு விடுவித்துள்ளது. தமிழக அரசின் இந்த சலுகை அறிவிப்பு வாரியங்கள், பல்கலைக் கழகங்கள், போக்குவரத்துக் கழகம், இதர பொது நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பொருந்தாது என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.