0 0
Read Time:2 Minute, 9 Second

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் இருந்து 20 கி.மீ தொலைவில் லிட்டில் பே என்ற கடற்கரை அமைந்துள்ளது. இந்த கடற்கரையினின் நீச்சல் அடித்து கொண்டிருந்த ஒருவரி திடீரென பெரிய அளவிலான சுறா மீன் தாக்கியுள்ளது. சுறா தாக்கப்பட்டதில் அந்த நபர் உயிரிழந்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி பார்ப்போர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
மேலும் இந்த சம்பவத்திற்கு பிறகு சிட்னி கடற்கரையில் நுழைவதற்கு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சுறா மீன் தாக்குதல் நடத்திய இடத்தை சுற்றிலும் அபாய பகுதி என எச்சரிக்கை பலகையையும் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது குறித்து நியூசவுத் வேல்ஸ் முதன்மை தொழில்துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறிருப்பது, இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்ததில் அந்த நபரை தாக்கியது 9.8 அடி நீளமுள்ள வெள்ளை நிற சுறாவாக இருக்கலாம் எனவும் சுறா உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1963 ஆம் ஆண்டுக்கு பின்னதாக சிட்னியில் நடந்த முதல் அபாயகரமான சுறா தாக்குதல் இதுவாகும் எனவும் கோடைக் காலத்தில் மக்கள் கடற்கரைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரியபடுத்தினர். மேலும் சுறா மீன் இருப்பதாக அதிகாரிகள் மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %