0
0
Read Time:1 Minute, 7 Second
மயிலாடுதுறை மாவட்டம், மணக்குடி கிராமத்தில் மிக பழமையான பாதாள வீரன், சப்த கன்னிகள் கோயிலில் பால்குட அபிசேக திருவிழா நடைபெற்றது. மணக்குடி கிராமத்தில் காவிரி நதி கரையிலிருந்து, பச்சை காளி, பவளகாளி ஆட்டத்துடன் 100 க்கு மேற்பட்டோர் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.
வழியெங்கும் பொதுமக்கள் வீடுகளில் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். பின்னர் கோயிலை சென்றடைந்த பால்குடம் பாதாள வீரனுக்கும், சப்தகன்னிகளுக்கும் மேளதாளம் முழங்க பாலாபிஷேகம் நடைபெற்றது. இப் பால்குட திருவிழாவை முன்னிட்டு கிராமமே விழா கோலம் பூண்டு, பக்தர்கள் சப்தகன்னிகளை தரிசித்து அம்பாளின் அருளை பெற்றனர்.