0 0
Read Time:4 Minute, 7 Second

உக்ரைன் நாட்டில் இருந்து இந்தியர்களை திரும்ப அழைத்து வர, விமானங்களை இயக்குவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாகவும், பத்திரமாக அழைத்து வர எத்தனை விமானங்கள் வேண்டுமானாலும் இயக்கி கொள்ள மத்திய அரசு அனுமலதியளித்துள்ளது.

ரஷ்யா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் தெரிவித்து வருகின்றன.

எல்லையில் இருந்து ரஷ்யா படைகள் திரும்ப பெறப்படுவதாக ரஷ்யா அரசு அறிவித்தாலும் அதனை அமெரிக்கா, உக்ரைன் நாடுகள் ஏற்கவில்லை. உக்ரைனில் போர் பதற்றம் தொடர்ந்தபடி இருப்பதால் அங்கிருக்கும் வெளிநாட்டினர் வெளியேறுமாறு அந்தந்த நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன.

இதற்கிடையே உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அந்த நாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என ஏற்கனவே இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. தற்போதுள்ள விமான சேவையை பயன்படுத்தி மாணவர்கள் உள்பட இந்தியர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதே நேரத்தில், போர் சூழல் நிலவுவதன் காரணமாக உக்ரைனில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, விமான கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் இந்திய மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.

இதற்கிடையே இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தியா – உக்ரைன் இடையே அதிக விமானங்களை இயக்குவது தொடர்பாக விமான நிறுவனங்களுடன் மத்திய சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, அதிக விமானங்களை இயக்க மத்திய அரசு முடிவு செய்யப்பட்டதையடுத்து விமானங்களை இயக்குவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை : இந்தியா – உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்கள் மற்றும் இருக்கைகளுக்கான எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் இயக்க அனுமதிக்கபடுகிறது. விமான சேவைகளை அதிகரிக்க இந்திய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மேலும் உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்புவது தொடர்பாக அறிந்து கொள்ள தலைநகர் கீவ்வில் உள்ள இந்திய தூதரகத்தில் கட்டுப்பாட்டு மையம் அமைப்பதோடு டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சகத்திலும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்படவுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %