0 0
Read Time:1 Minute, 24 Second

சென்னை குரோம்பேட்டையில் 2 மணி நேரத்தில் பைபிளிலுள்ள 2 ஆயிரத்து 461 வசனங்களை ஒப்புவித்து இரண்டு சிறுவர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்.
சென்னை படூரை சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன்கள் 10 வயதான அபிஷேக் இம்மானுவேல் மற்றும் 8 வயதான கெவின் எபிநேசர். தனியார்ப் பள்ளியில் பயின்று வரும் இவர்கள் இளம் வயதிலேயே நினைவாற்றல் மிக்கவர்களாக இருப்பதை அறிந்த பெற்றோர், சிறுவர்களை கிறிஸ்தவ புனித நூலான பைபிளைப் படிக்க வைத்துள்ளனர்.
அதன்படி பைபிளில் இடம் பெற்றுள்ள 150 அதிகாரத்தை உள்ளடக்கிய 2 ஆயிரத்து 461 வசனங்களை மனப்பாடமாக ஒப்புவித்து உலக சாதனை படைக்க விரும்பினர். இந்நிலையில், இருவரும் 2 மணி நேரம் 16 நிமிடத்தில் அனைத்து வசனங்களையும் கூறி உலக சாதனை படைத்துள்ளனர்.

இதனை அங்கீகரித்து லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் தலைவர் ஜோசப் இளந்தென்றல் இருவருக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %