0 0
Read Time:1 Minute, 20 Second

பாவூர்சத்திரத்தில் கடந்த 3-ம் தேதி பள்ளி கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம், கல்லூத்து கிராமத்தை சேர்ந்த லிங்கம் மற்றும் விஜயலட்சுமி தம்பதியின் மகள் பொன்னரசி. இவர் பாவூர்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

சென்னைக்கு சுற்றுலா சென்ற தாய், தன்னையும் உடன் அழைத்து செல்லவில்லை என்பதால், மாணவி பொன்னரசி, மன வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த 3-ம் தேதி பள்ளியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவருக்கு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %