0 0
Read Time:2 Minute, 11 Second

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 24- ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்நிலையில், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 24-ம் தேதி, சென்னை பெரியமேட்டில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு 24 மற்றும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு 25-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும் எனவும், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுப் பிரிவு கலந்தாய்வு வரும் 28-ஆம் தேதி முதல் மார்ச் 3ம் தேதி வரை இணைய வழியில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிப்ரவரி 28 ஆம் தேதி பொதுப்பிரிவு கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் பதிவு செய்தல், கல்லூரி மற்றும் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளை தேர்வு செய்தல் ஆகியவற்றை மார்ச் 3 ஆம் தேதி மாலை 5 மணி வரை மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை http://www.tanuvas.ac.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %