கடலூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 188 போ் ஈடுபடுத்தப்படுகின்றனா். ஒரு மேஜைக்கு தலா ஒரு கண்காணிப்பாளா், வாக்கு எண்ணிக்கை உதவியாளா் நியமிக்கப்பட்டுள்ளனா்
கடலூா் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் 188 போ் ஈடுபடுத்தப்படுகின்றனா். அதாவது ஒரு மேஜைக்கு தலா ஒரு கண்காணிப்பாளா், வாக்கு எண்ணிக்கை உதவியாளா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதன்படி மொத்தம் 88 வாக்கு எண்ணிக்கை மேஜைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கண்காணிப்பாளராக 90 பேரும், உதவியாளா்களாக 98 பேரும் நியமிக்கப்பட்டனா்.
143 கண்காணிப்பு கேமராக்கள்: ஒவ்வொரு வாக்கு எண்ணும் மேஜைக்கும் தலா ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது. இதன்படி, கடலூா் மாநகராட்சிக்கு 28 கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கப்படுகிறது.
நகராட்சிகள் அளவில் நெல்லிக்குப்பம்-20, பண்ருட்டி-16, சிதம்பரம்-22, விருத்தாசலம்-6, திட்டக்குடி-4, வடலூா்-15 கேமராக்களும், பேரூராட்சிகளில் புவனகிரி, தொரப்பாடி பேரூராட்சிகளுக்கு தலா 4, மற்ற பேரூராட்சிகளுக்கு தலா 2 கண்காணிப்புக் கேமராக்கள் என மொத்தம் 143 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.