0 0
Read Time:3 Minute, 18 Second

பெங்களூரு: கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சீருடை தவிர ஹிஜாப்-காவிதுண்டு உள்ளிட்ட ஆடைகளை அணிய தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை உடுப்பி மாவட்டம் குந்தாபுராவில் உள்ள அரசு பள்ளியில் அனுமதிக்கவில்லை. இந்த விவகாரம் கர்நாடகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையடுத்து, ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஹிஜாப், காவி துண்டு அணிந்து வருவதற்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் ஐகோர்ட்டு உத்தரவை மீறி ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகள் பள்ளி, கல்லூரிகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதே நேரத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக வழக்கு விசாரணை கர்நாடக ஐகோர்ட்டில் கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற்றது. இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணை மீண்டும் இன்று நடைபெறுகிறது. மதியம் 2.30 மணியளவில் இந்த வழக்கு நீதிபதி முன்னிலையில் விசாரணை நடக்க உள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் நவத், கல்வி நிறுவனங்களில் ஆடை கட்டுப்பாடு குறித்து முடிவு செய்ய கல்லூரி மேம்பாட்டுக் குழுவை அரசு அனுமதிப்பதாக தெரிவித்தார். இன்றும் அரசின் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நாவதகி ஆஜராகி வாதாட உள்ளார். அரசு தரப்பு வாதங்கள் முடிந்த பின்பு, மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிடலாம் என்று தெரிகிறது. அதன்பிறகு, கூடிய விரைவில் இந்த வழக்கில் ஐகோர்ட்டு இறுதி தீர்ப்பு வழங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பி.யூ.சி. 2-ம் ஆண்டுக்கான மாணவ, மாணவிகளுக்கு செய்முறை தேர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கி நடைபெற உள்ளது.

இதனையடுத்து, ஹிஜாப் விவகாரத்தால் பிரச்சினைகள் தலைதூக்காமல் இருக்க கர்நாடகத்தில் உள்ள உடுப்பி, தட்சிண கன்னடா, சிவமொக்கா, தாவணகெரே உள்ளிட்ட பதற்றமான மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %