கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கும்பகோணம் மாநகராட்சிக்கான 48 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து வாக்குப்பதிவான மின்னணு எந்திரங்களுக்கு முகவர்கள், வேட்பாளர்கள் முன்னிலையில் தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்து லாரிகள் மூலம் கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு அறைக்கு சீல்வைக்கப்பட்டது.
தொடர்ந்து அறைக்கு கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் சுழற்சி முறையில் எட்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு இன்ஸ்பெக்டர் 4 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 40 போலீசார் கொண்ட குழுவினர் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு அளித்து வருகிறார்கள்.