0 0
Read Time:4 Minute, 43 Second

திருவாரூரில் வாக்கு எண்ணும் மையத்துக்கு போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் பேரளம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம், முத்துப்பேட்டை ஆகிய 7 பேரூராட்சிகள் ஆகியவற்றிற்கான உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது.இதில் 4 நகராட்சிகள் 47 ஆயிரத்து 737 ஆண் வாக்காளர்கள், 55 ஆயிரத்து 275 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 12 பேர் வாக்களித்தனர். இது 66.28 சதவீதமாகும்.

7 பேரூராட்சிகளில் 69 ஆயிரத்து 45 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 22 ஆயிரத்து 951 ஆண் வாக்காளர்கள், 27 ஆயிரத்து 235 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினம்-1. ஆகமொத்தம் 50 ஆயிரத்து 187 பேர் வாக்களித்தனர். இது 72.69 சதவீதமாகும்.

திருவாரூர் மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேருராட்சிகளில் நடைபெற்ற தேர்தலில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 462 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 70 ஆயிரத்து 688 ஆண் வாக்காளர்கள், 82 ஆயிரத்து 510 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்-1, என மொத்தம் 1 லட்சத்து 53 ஆயிரத்து 199 பேர் வாக்களித்தனர். இது 68.25 சதவீதமாகும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த பகுதி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதன்படி திருவாரூர் நகராட்சிக்கு திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மன்னார்குடி நகராட்சிக்கு மன்னார்குடி பின்லே மேல்நிலைப்பள்ளி, திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு திருத்துறைப்பூண்டி செயிண்ட் தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கூத்தாநல்லூர் நகராட்சிக்கு கூத்தாநல்லூர் ஜமியா பெண்கள் நடுநிலைப்பள்ளி, நன்னிலம், பேரளம், குடவாசல் பேரூராட்சிகளுக்கு நன்னிலம் பாரதிதாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதேபோல் கொரடாச்சேரி, வலங்கைமான், நீடாமங்கலம் பேரூரரட்சிகளுக்கு கோவில்வெண்ணி அஞ்சலை அம்மாள் மகாலிங்கம் கல்லூரி, முத்துபேட்டை பேரூராட்சிக்கு கோவிலூர் பெரியநாயகி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் கட்சி முகவர்கள் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை உள்பட வாக்கு எண்ணிக்கை மையம் முழுவதும் சுழலும் கேமராக்கள் வைக்கப்பட்டு கட்டுபாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு பணியில் போலீசார் 24 மணி நேரம் சுழற்சி முறையில் ஈடுபடுகின்றனர். அதனை தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %