0 0
Read Time:2 Minute, 9 Second

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி +2 படித்து வந்த 17 வயது மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

மாணவியை மதம் மாற வற்புறுத்தியதும், கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லி துன்புறுத்தியதும்தான் தற்கொலைக்கு காரணம் என பாஜக குற்றம்சாட்டியிருந்தது. இதனையடுத்து மாணவியின் தந்தையும் தற்கொலைக்கு மதம் மாற்ற வற்புறுத்தல்தான் காரணம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மாணவி பயின்ற பள்ளியில் சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கியுள்னர். மாணவி தங்கியிருந்த பள்ளி விடுதிகளிலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக மாணவி தற்கொலை விவகாரத்தில், மதமாற்ற நடவடிக்கை காரணம் என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என தஞ்சை பள்ளி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
அந்த விளக்கத்தில் தங்கள் பள்ளியில் பயிலும் குழந்தைகள் பல மதங்களையும், சமூகங்களையும் சேர்ந்தவர்கள் என்றும், அனைவருக்குமான சமய சார்பற்ற கல்வியை அளித்து வருவதாகவும், யாருடைய மத நம்பிக்கையிலும் குறுக்கிடுவதில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %