0 0
Read Time:2 Minute, 28 Second

பஸ் ஓட்டுனருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் பெண் ஒருவர் சாமர்த்தியமாக பேருந்தை செலுத்தி ஓட்டுனரின் உயிரை காப்பாற்றிய சம்பவம் மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுலா பேருந்து ஓட்டுநர் ஒருவர் மொராச்சி சின்சோலி என்கிற சுற்றுலா தளத்திற்கு பெண் பயணிகளை பேருந்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது திடீரென அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளது. இதனால் தடுமாற்றம் அடைந்த ஓட்டுநர் ஒரு கட்டத்திற்கு மேல் மயங்கி விழும் நிலைக்கு சென்றுவிட்டார்.

இதையெல்லாம் ஒரு ஓரமாக இருந்துக்கொண்டு கவனித்து வந்த யோகித்தா சதவ் என்கிற பெண் பயணி ஒருவர் பேருந்தை நிறுத்தும்படி அவரிடம் கேட்டுள்ளார். பிறகு பெண் பயணியின் அறிவுரையின் பேரில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநருக்கு மீண்டும் வலி அதிகரித்துள்ளது.

அதைக் கண்டு அதிர்ச்சியடைந்து ஓட்டுனரிடம் இருந்து பேருந்தை வாங்கிய யோகித்தா சதவ், எந்த வித முன் அனுபவமும் இன்றி தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்து ஓட்ட ஆரம்பித்துவிட்டார். மிக சாமர்த்தியமாக செயல்பட்ட அந்த பெண் சரியான நேரத்தில் பேருந்தை இயக்கி ஓட்டுநரை மருத்துவமனையில் அனுமதித்தார். மேலும் அந்த பெண் பயணியின் விவேகமான செயல்பட்டால் அந்த பேருந்து ஓட்டுனரின் உயிர் காக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த செய்திகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

இதனையடுத்து எந்தவித முன் அனுபவமும் இன்றி பேருந்தை ஓட்டிய அந்த பெண்ணின் வீர செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %