சென்னை, விருகம்பாக்கத்தில் 22 வயதில், 136-வது வார்டு மாமன்ற உறுப்பினராக ’நிலவரசி’ திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இதில், கட்சி சார்பாகவும், சுயேச்சையாகவும், இளைஞர்கள், பெண்கள், திருநங்கை என பலரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், தேர்தல் களத்தில் கடும்போட்டி நிலவியது.
இதில், தலைநகர் சென்னை மாநகாரட்சியை கைப்பற்றப்போவது யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பும் நிலவுகிறது. திமுகவில் இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் அதிகளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி திமுக வாய்ப்பு வழங்கியுள்ளதில், விருகம்பாக்கம் 136-வது வார்டு மாமன்ற உறுப்பினராக போட்டியிடும் 22 வயதே ஆன இளம் பெண் ’நிலவரசி’ அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
அவர் இதுகுறித்து தெரிவிக்கும்போது, ”எனக்கு அரசியல் ரோல் மாடல் அண்ணன், உதயநிதி ஸ்டாலின்” தான் என்றும், ”இன்றைய அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமான தேவையாக உள்ளது எனவும், உழைத்தால் அந்த உழைப்பே அரசியலில் தூக்கிவிடும்” என நிலவரசி நெகிழ்ச்சிப்பட கூறுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 16ஆம் தேதி நடந்துமுடிந்த நிலையில், இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் இளம் பெண் வேட்பாளரான நிலவரசி சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் 136-வது வார்டில் வெற்றி பெற்றுள்ளார்.