0 0
Read Time:1 Minute, 31 Second

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு நடத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிமுதல் தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன.

அதில், 21 மாநகராட்சிகளையும் தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றுகிறது. அதேவேளையில் எதிர்க்கட்சிகளான அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் தோல்வி அடைந்துள்ளது.

இப்படி இருக்கையில், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து முதல் தேர்தலை சந்தித்த கடலூர் மாநகராட்சியை தி.மு.க கைப்பற்றியிருக்கிறது.

அதன்படி கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 41 வார்டுகளுக்கு வெற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணி 31, அ.திமு.க 6, பா.ம.க 1, பா.ஜ.க 1, சுயேட்சை 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்கின்றன.

தி.மு.க கூட்டணியில் தி.மு.க 25, வி.சி.க 3, த.வா.க 2, காங்கிரஸ் 1 என மொத்தம் 31.வார்டுகள் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %