தமிழ்நாட்டில்; நகர்ப்புற உள்ளாட்சி தேர்தாலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முடிவடைந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பேரூராட்சி தேர்தலில் மொத்தம் 3843 வார்டுகள் இருக்கின்றன. இதில் 7603 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில், பெரும்பாலான இடங்களை (4388) திமுக கைப்பற்றியுள்ளது. மேலும், அதிமுக – 1206 காங்கிரஸ் – 368 பாஜக – 230 சிபிஎம் – 101 பாமக – 73, அமமுக 66, விசிக 51, மதிமுக 34, சிபிஐ 26, தேமுதிக 23, எஸ்டிபிஐ 16, மமக 13, முஸ்லீம் லீக் 12, நாம் தமிழர் 6, புதிய தமிழகம் 3, மார்க்சிஸ்ட் (மா.லெ) 1, ஐஜேகே 1, என்சிபி 1, பகுஜன் சமாஜ் 1, மஜக 1, தமமுக 1 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும், பேரூராட்சியில் சுயேட்சைகளின் வெற்றியும் சற்று உயர்ந்தே இருக்கிறது. மொத்த 1374 இடங்களில் சுயேட்சைகள் 981 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளனர். மேலும், 196 இடங்களில் போட்டியின்றி தேர்வு நடைப்பெற்றது. 12 இடங்களில் தேர்தல் ரத்தும், 4 இடங்களில் தேர்தல் தள்ளிவைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 இடத்தில் வேட்புமனு தாக்கல் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நகராட்சி தேர்தலில் மொத்தம் 3843 வார்டுகள் இருக்கின்றன. இதில், 3842 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக 2360 இடங்களை கைப்பற்றி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், அதிமுக 638, காங்கிரஸ் 151, பாஜக 56, பாமக 48, சிபிஎம் 41, மதிமுக 34, அமமுக 33, விசிக 26, முஸ்லீம் லீக் 23, சிபிஐ 19, தேமுதிக 12, எஸ்டிபிஐ 5, பகுஜன் சமாஜ் 3, மமக 4, ஐஜேகே 2 ஆகிய இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் சமக, மஜக, புதிய தமிழகம், அகில இந்திய பார்வர்ட் ப்ளாக், மதசார்பற்ற ஜனதா தளம், ஓவைசி ஆகிய கட்சிகள் தலா 1 இடத்தை கைப்பற்றியுள்ளது. இதில் சுயேட்சையினர் 381 இடங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும், 18 இடங்களில் போட்டியின்றி தேர்வு நடைப்பெற்றது. 12 இடங்களில் தேர்தல் ரத்தும், 1 இடத்தில் தேர்தல் தள்ளிவைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 1374 வார்டுகள் இருக்கின்றன. இதில், 1373 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக 2360 இடங்களை கைப்பற்றி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 164, காங்கிரஸ் 73, மார்க்சிஸ்ட் 24, பாஜக 22, மதிமுக 21, விசிக 16, சிபிஐ 13, முஸ்லீம் லீக் 6, பாமக 5, அமமுக 3, எஸ்டிபிஐ 1 வெற்றி பெற்றுள்ளனர். இதில் சுயேட்சையினர் 73 இடங்களை கைப்பற்றியுள்ளனர். மேலும், 4 இடங்களில் போட்டியின்றி தேர்வு நடைப்பெற்றது. 1 இடத்தில் தேர்தல் தள்ளிவைப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.