திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் தந்தை மகன் என தொடர்ந்து 25 ஆண்டுகளாக கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
திண்டுக்கல் மாநகராட்சி 12வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது தந்தை சிதம்பரம் திமுக சார்பில் போட்டியிட்டு கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 2001 வரை திண்டுக்கல் நகராட்சி கவுன்சிலராக இருந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது வெற்றி பெற்றுள்ள சிதம்பரத்தின் மகன் ஜானகிராமன் 2001 முதல் 2006 வரை நகர்மன்ற உறுப்பினராக பதவியில் இருந்தார். அதன் பின்னர் தொடர்ந்து 2 முறை ஜானகி ராமனின் தாய் நாகலட்சுமி பத்தாண்டு காலமாக கவுன்சிலராக பணியாற்றி வந்தார்.
இதன் பின்னர் தற்பொழுது நடந்த மாநகராட்சி தேர்தலில் அதே வார்டில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட்டு ஜானகி ராமன் வெற்றி பெற்றுள்ளார். இவரது வெற்றியை தொடர்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் என மூன்று பேரும் தொடர்ந்து 25 ஆண்டுகளாக கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.