நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று முடிவடைந்தது. கடலூர் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி 6 நகராட்சி 14 பேரூராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அனைத்து இடங்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் கைப்பற்றியது.கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் 34 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது அதிமுக 6 இடங்களை கைப்பற்றியுள்ளது.கடலூர் மாநகராட்சியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வார்டுயெனில் அது 27 வார்டு தான்.
இங்கு திமுக சார்பில் நகர செயலாளர் ராஜா, அதிமுக சார்பில் சங்கீதா வசந்த ராஜ் என்பவரும போட்டியிட்டனர்.திமுக கடலூர் மாநகராட்சி அதிக இடங்களை கைப்பற்றுமானால் நகர செயலாளரின் ஆதரவாளர் கடலூர் மாநகராட்சியின் முதல் மேயர் ஆக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், அதிமுக கடலூர் மாநகராட்சியில் அதிக இடங்களை கைப்பற்றினால் சங்கீதா வசந்த ராஜ் மேயராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கடுமையான போட்டிக்கு மத்தியில் இந்த உள்ளாட்சித் தேர்தலில் இருபத்தி ஏழாவது வார்டு மிகவும் கவனமாக பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானது 27வது வார்டில் திமுக நகர செயலாளர் ராஜாவை தோற்கடித்து அதிமுக வேட்பாளர் சங்கீதா வசந்தராஜ் வெற்றி பெற்றார்.அதிமுக சார்பில் கடலூர் மாநகராட்சி 27வது வார்டில் போட்டியிட்ட சங்கீதா வசந்த ராஜ் அரசுப் பணியை துறந்து தேர்தலை சந்தித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.