அச்சுறுத்தல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை அறிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ், லுகன்ஸ் பகுதிகளை தன்னாட்சி பிராந்தியங்களாக ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அதற்கான ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ள அதிபர் புதின், அந்த 2 பிராந்தியங்களில் மட்டும் ரஷ்யப்படைகள் அமைதி காக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் உக்ரைனுக்குள் நுழைய ரஷ்யப்படைகளுக்கு அதிகாரப்பூர்வ அனுமதியை புதின் வழங்கியுள்ளார். இதன் காரணமாக, உக்ரைன், ரஷ்யா இடையே போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. நிலைமையை கட்டுக்குள் வைக்க அவசர நிலையை கொண்டு வர தேசிய அவசர நிலையை அமல்படுத்துமாறு, நாடாளுமன்றத்துக்கு தேசிய பாதுகாப்பு கவுன்சில் பரிந்துரைத்தது. இதை ஏற்று ஒப்புதல் அளித்துள்ள நாடாளுமன்றம்,
உக்ரைன் – ரஷ்யாவுக்கு இடையேயான போர்ச்சூழல் குறித்த அப்டேட் தகவல்கள் இதோ…
உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அந்நாட்டில் தேசிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் பகுதிகளில் 30 நாட்களுக்கு விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் உள்ள ரஷ்ய தூதரகங்களில் இருந்து அதன் பணியாளர்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்ய நாட்டின் கியேவில் உக்ரைன் தூதரகம் உள்ளது, மேலும் கார்கிவ் ஒடேசா மற்றும் லிவிவ் ஆகிய இடங்களிலும் தூதரகங்கள் உள்ளன. இப்போது கியேவில் உள்ள தூதரகத்தில் இருந்து அதன் பணிகளை வெளியேற்றும் பணிகள் தொடங்கியுள்ளன என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் அவசரநிலை சட்டம் அமலுக்கு வந்த நிலையில் பொதுமக்கள் துப்பாக்கிகளை எடுத்துச் செல்லவும், தற்காப்புக்காக செயல்படவும் அனுமதிக்கும் வரைவு சட்டத்தை அங்கீகரிப்பதாக உக்ரைன் பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் எல்லைக்கு அருகில் தெற்கு பெலாரஸ் நாட்டின் எல்லைகளில் 100 க்கும் மேற்பட்ட இராணுவ வாகனங்கள் மற்றும் டஜன் கணக்கான துருப்புக் கூடாரங்கள் புதிதாக உருவாகியிருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டின.
மேக்சர் டெக்னாலஜிஸ் வெளியிட்ட படங்கள் அடிப்படையில் , உக்ரைனின் எல்லைக்கு அருகில் மேற்கு ரஷ்யாவில் உள்ள ராணுவப் படையில் ஒரு புதிய கள மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், “எங்கள் நாடு எப்போதும் நேரடியான மற்றும் நேர்மையான உரையாடலுக்குத் திறந்திருக்கும் மற்றும் மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கு இராஜதந்திர தீர்வுகளைத் தேட தயாராக உள்ளது” என்று கூறினார்.
“ரஷ்யாவின் நலன்களும், பொது மக்களின் பாதுகாப்பும் நிபந்தனையற்றது என்பதை நான் மீண்டும் கூற விரும்புகிறேன். எனவே, நமது ராணுவம் மற்றும் கடற்படையை பலப்படுத்தவும், நவீனப்படுத்தவும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்வோம்” என அந்நாட்டின் அதிபர் புதின் தெரிவித்தார்
ரஷ்யாவில் வசிக்கும் தங்கள் நாட்டின் அனைத்து குடிமக்களையும் – உடனடியாக வெளியேறுமாறு உக்ரைன் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. அவர்களின் எண்ணிக்கை சுமார் 30 லட்சம் பேர் என கணக்கிடப்பட்டுள்ளது.
உக்ரைன் தனது 18 முதல் 60 வயதுடைய அனைத்து ராணுவ வீரர்களையும் நாட்டின் பாதுகாப்புக்கு பங்களிக்க அழைத்துள்ளது
தனது அரசாங்க இணையதளம் மற்றும் வங்கிகள் மீது பெரிய அளவிலான சைபர் தாக்குதல் ரஷ்யாவால் நடத்தப்படுவதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யா தனது துருப்புக்களை எல்லைக்கு அருகே நெருங்கி வருவதாகக் கூறப்படுகிறது. 80-100 சதவீத ரஷ்ய துருப்புக்கள் படையெடுப்புக்குத் தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் நார்டு ஸ்ட்ரீம் எனப்படும் முக்கிய எரிவாயு குழாய் திட்ட நிர்வாகம் மீது பொருளாதாரத் தடை விதித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இது ஆரம்பகட்ட நடவடிக்கைதான் என்றும், ரஷ்யாவின் மீது அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன, இது ரஷ்யாவிற்கு மேற்கத்திய நிதியுதவி அல்லது சந்தைகளை அணுகுவதை கடினமாக்குகிறது. மேலும் மேற்கத்திய நாடுகள் பலவும் தொடர்ந்து ரஷ்யா பொருளாதார தடைகளை அறிவித்து வருகின்றன.
Source:புதியதலைமுறை