0 0
Read Time:2 Minute, 53 Second

சென்னை, தேனாம்பேட்டையில் அமைந்துள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பங்கேற்ற அமைச்சர் மா.சுப்ரமணியன்,ரூ 1.11 கோடி செலவில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் பணியிடங்களுக்கான 6 பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.போலியோ இல்லாத இந்தியாவிற்காக முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது, போலியோ பாதிப்பே இல்லை என்ற நிலை தமிழ்நாட்டில் உள்ளது. 11 ஆண்டுகளாக இந்தியாவில் எங்கேயும் கண்டறியப்படவில்லை.தமிழகத்தில் இன்னும் 57 லட்சத்து 61,000. குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட வேண்டும்.

இவர்களுக்காக 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படவுள்ளது.696 இடங்களில் நடமாடும் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு
சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்கள், பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

பல்ஸ் போலியோ முகாமை 27 ஆம் தேதி காலை 8 மணிக்கு தேனாம்பேட்டையில் தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.12 வயது முதல் கொரோனா தடுப்பூசி செலுத்த ஒன்றிய அரசு அங்கீகரித்துள்ளது.

12-15 வயதுக்குள் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்காக 3,89,000 தடுப்பூசிகள் சென்னை வந்துள்ளன.தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு மிகவிரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். அனுமதிக்கின்ற நாளிலிருந்து தடுப்பூசி போடப்படவுள்ளது

பல்ஸ் போலியோ முகாமினால் இந்த வாரம் நடத்தப்படவேண்டிய 23 ஆவது மெகா தடுப்பூசி முகாம் அடுத்தவாரத்திற்கு தள்ளி வைக்கப்படுகின்றது.. அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 2534 இடங்களில் தினந்தோறும் தடுப்பூசி போடுவதில் மாற்றம் இருக்காது என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %