0 0
Read Time:3 Minute, 6 Second

மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலி நடைபெறும் இந்த ஆண்டு அருள்மிகு மயூரநாதர் கோவிலில் 16 ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா தொடங்கியது

சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் 16 ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா பிப்ரவரி 26 முதல் மார்ச் 1ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

இதில் சென்னை கோவை சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட பரதக் கலைஞர்கள் தங்களது நாட்டியத்தின் மூலம் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

16 ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழாவிற்கு சப்தஸ்வரங்கள் அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் ஏ ஆர் சி விசுவநாதன் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் மருத்துவர் செல்வம், சிவலிங்கம்,ரவிச்சந்திரன், பாண்டுரங்கன், செந்தில்வேல், ஏ ஆர் சி அசோக், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், பிரிட்டன் தமிழ் பக்தி தலைமை நிர்வாகி லட்சுமிகாந்தன், சென்னை டிஎம் நெட்வொர்க் எக்ஸிக்யூட்டிவ் துணைதலைவர் ரமேஷ், ஹோட்டல் சதாபிஷேகம் நிர்வாக இயக்குனர் குமரன், அருள்மிகு மயூரநாதர் ஆலய துணை கண்காணிப்பாளர் கணேசன், ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சுரன்ஸ் தலைமை நிர்வாகி முரளி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்த கொண்டனர்.

இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை ஆலோசனை குழு உறுப்பினருமான முனைவர் மதிவாணன் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் ஆகியோர் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மயூர நாட்டியாஞ்சலி விழாவை தொடங்கி வைத்தனர்.

முதல்நாள் மயூர நாட்டியாஞ்சலி விழாவில் கோவை, சென்னைஉள்ளிட்ட குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலை ஆர்வலர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %