0 0
Read Time:3 Minute, 57 Second

இந்தியாவில் போலியோ நோயை அறவே ஒழிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 543 இடங்கள், நகர்புறங்களில் 39 இடங்கள் என்று மொத்தம் 582 மையங்களில் போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட்டு முகாமை மாவட்ட ஆட்சியர் லலிதா துவக்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர்புறங்களில் 7,695 குழந்தைகள் கிராமப்புறங்களில் 68,269 குழந்தைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் 41 குழந்தைகள் என்று 75,964 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது.

5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் கட்டிப்பாக போலியோ சொட்டு மருந்து செலுத்திகொள்ள வேண்டும் என்றும் ஞாயிற்றுக்கிழமை விடுபட்டவர்கள் திங்கள் மற்றும் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறும் சிறப்பு முகாம்களில் சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும், போக்குவரத்து வசதி இல்லாத குக்கிராமங்களுக்காக 5 நடமாடும் வாகனங்கள் மூலமாக சொட்டு மருந்து முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5 வயதிற்கு உட்பட்ட தங்களின் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்தை செலுத்தி போலியோ நோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இதேபோல், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் வட்டாரத்தில் சுமார் 17 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

முதற்கட்டமாக தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் நிவேதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கார்த்திக் சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற முகாமில் பூம்புகார் சட்டமன்ற சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் செம்பனார்கோவில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சிவரஞ்சனி, வட்டார சுகாதார ஆய்வாளர் சீனிவாச பெருமாள், செவிலியர் விஜயலட்சுமி, பள்ளி முதல்வர் சுகுன சங்கரி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கொக்கரக்கோ- சௌமியன் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %