சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் எம்.என். முனிஷ்வர் நாத் பாண்டாரி க்கி அனுப்பி உள்ள மனுவின் நகலை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வை சென்னையில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நடராஜர் கோவில் பிரசாதங்களை கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத்தலைவர் ஜெமினி எம்.என்.ராதா வழங்கினார்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
சிதம்பரம் நடராஜர் கோவிலை தீட்சிதர்கள் தான் கட்டினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் கோவிலை பொதுதீட்சதர்கள் நிர்வாகிகளால் என்றும் முறைகேடுகள் நடைபெற்றால் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதை விசாரிக்கலாம் கோயில் நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்த கோரியும் உடனடியாக தமிழக அரசு ஒரு குழுவை அமைத்து நிரந்தர தீர்வுகாணவும் சிற்றம்பல மேடையில் (கனகசபை) ஏறி பக்தர்கள் வழிபட உத்தரவிட வேண்டும் கூறியுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விடும் இதுகுறித்து அறநிலையத் துறையை மூலம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நிருபர்:பாலாஜி