0 0
Read Time:2 Minute, 59 Second

உக்ரைன்: உக்ரைன் தலைநகர் கீவ்வில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என உக்ரைன் ராணுவம் அறிக்கை அனுப்பியுள்ளது. கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன எனவும் கூறியுள்ளது.

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல்களினால் இதுவரையில் 14 குழந்தைகள் உட்பட 352 போ் உயிரிழநதுள்ளதாக சர்வதேச நெய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரைனின் மீது ரஷ்யா தொடர்ந்து ஐந்தாவது நாளாகவும் தாக்குதலை முன்னெடுத்துவருகிறது.

முன்னதாக இரு தரப்பிற்கும் இடையே நடந்துவரும் மோதலில் 4,300 ரஷ்ய இராணு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு நேற்று தெரிவித்திருந்தது. ஆனால், உயிரிழந்தவர்களின் விபரம் குறித்து ரஷ்யா எந்த மறுப்பும் தெரிவிக்காமல் இருந்து வந்தநிலையில் உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலில் தங்கள் தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது உண்மைதான் என ரஷ்யா முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திபில் பேசிய ரஷ்ய பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் இகோர் கொனஷெங்கோவ், “தங்கள் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், பலரும் காயமடைந்துள்ளனர். எனினும் உக்ரைன் தரப்பை விட தங்கள் தரப்பில் பாதிப்புகள் பல மடங்கு குறைவுதான்” என்று அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்து ரஷ்யா எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் ரஷியா தாக்குதலில் உக்ரைனில் இதுவரை 14 குழந்தைகள் உட்பட, 352 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 5 ஆவது நாளாக போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை 14 குழந்தைகள் உட்பட, 352 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 116 குழந்தைகள் உட்பட 1,684 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் உக்ரைனின் ஆயுதப்படையினரின் உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலையும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவிக்கவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %